269 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 269 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்

Update: 2023-08-25 11:51 GMT

மூலனூர்

மூலனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 5- உயர்நிலை பள்ளிகளில் மொத்தம் 269மிதிவண்டிகள் வழங்கும் விழாவை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி கன்னிவாடி பேரூராட்சி, வடுகபட்டி, புதுப்பை, தலையூர், ஆகிய பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

மாவட்ட வருவாய்துறை அலுவலர்.

ஜெய் பீம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை விளக்கி கூறி வரும் காலங்களில் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை கூறி அவர்கள் வரும் காலங்களில் வெற்றி அடைய அறிவுரைகளை கூறினார் அதன் பின்னர் மூலனூர் பேரூராட்சி, கன்னிவாடி பேரூராட்சி, வடுகபட்டி, புதுப்பை, புஞ்சை தலையூர் ஆகிய பகுதிகளில் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளான மொத்தம் 269-பேருக்கு இலவச மிதிவழிகளை வழங்கினார் இந்த விழாவில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன்,மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்