அரசு பள்ளிக்கு இலவச கம்ப்யூட்டர்

தென்காசி அருகே அரசு பள்ளிக்கு இலவச கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது.

Update: 2022-08-30 18:24 GMT

தென்காசி அருகே உள்ள சீவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இலவச கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் மூக்கம்மாள் தலைமை தாங்கினார். சீவநல்லூர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மாரியப்பன் மற்றும் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பண்பொழி செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளியின் சேர்மன் ரோனி பள்ளிக்கு இலவசமாக கம்ப்யூட்டர் வழங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் லதா கணினியினை பெற்று கொண்டார். செங்கோட்டை முன்னாள் யூனியன் தலைவர் சட்டநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினார். பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் கதிரவன், உறுப்பினர்கள் சத்யா, துர்க்காதேவி, கிருஷ்ணவேணி மற்றும் சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்