விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள்

நாங்குநேரி அருகே விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

Update: 2022-12-27 20:44 GMT

இட்டமொழி:

நாங்குநேரி வட்டாரம் சிங்கநேரி பஞ்சாயத்தில் வேளாண்மைத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா இரண்டு தென்னை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் விழா நடந்தது. சிங்கநேரி பஞ்சாயத்து தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம், 300 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதாபாய், அட்மா திட்ட மேலாளர் பிரதீப் தேவதாஸ், உதவி மேலாளர் பிரதாப்சிங், வேளாண்மை அலுவலர் அஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்