போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிிவித்துள்ளார்.

Update: 2022-07-30 16:16 GMT

வெளிப்பாளையம்:

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலவச பயிற்சி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள 2-ம் நிலை போலீஸ், இரண்டாம் நிலை சிறை போலீஸ் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான, தேர்வுக்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

அலுவலக வேலை நாட்களில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) மாதம் 11-ந்தேதி முதல் தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.

பயன்பெறலாம்

மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், அறிவிக்கையின்படி 15.8.2022 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த போலீஸ் போட்டி தேர்விற்கு விண்ணப்பித்துள்ள நாகை மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்