இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம்
குடியாத்தத்தில் இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம் நடந்தது.
குடியாத்தம் அத்தி கல்விக் குழுமம் சார்பில் இலவச புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது. குடியாத்தம் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் எம்.சுந்தரமூர்த்தி தொடங்கி வைத்தார். அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் ஜி.ரேவதி, குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் வி.எம் ரவீந்தர்யாதவ் வரவேற்றார்.
150 பயனாளிகளுக்கு இலவசமாகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது. பேராசிரியர் மற்றும் புற்று நோயியல் துறை தலைவர் அனிதாரமேஷ் மருந்துவ ஆலோசனை வழங்கினார். செவிலியர்கள் அஞ்சலி, லாவண்யா, குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி துறை தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்.