பெண்களுக்கான இலவச பஸ்களில் இளஞ்சிவப்பு வர்ணம்

பெண்களுக்கான இலவச பஸ்களில் இளஞ்சிவப்பு வர்ணம் பூசப்பட்டது.

Update: 2022-11-07 20:20 GMT

தமிழக அரசால் பெண்களுக்கான இலவச பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பஸ்களை அடையாளம் காண இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்ட பஸ்கள் நேற்று உப்பிலியபுரம் பகுதியில் முதன் முதலாக இயக்கப்பட்டன. பெண்களுக்கான இலவச பஸ்களை பொதுமக்கள் சிரமமின்றி அடையாளம் காண இளஞ்சிவப்பு நிற வர்ணங்கள் பஸ்களின் முன்புறமும், பின்புறமும் பூசப்படுவதாக உப்பிலியபுரம் அரசு பேருந்து பணிமனை கிளை மேலாளர் சதீஸ்குமார் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்