புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களுக்கான இலவச பஸ் சேவை தொடக்கம்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களுக்கான இலவச பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-05 12:01 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் மாநில அரசால் பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் சேவை திட்டம் அறிமுகபடுத்தப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. இந்தப் பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்கள் ஒரு ரூபாய் கட்டணத்தில் பள்ளிகளுக்கு பயணிக்கலாம்.

இந்த திட்டத்தால் புதுச்சேரி, காரைக்காலில் சுமார் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைந்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் மாணவர் சிறப்பு பஸ் சேவை இயக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவ, மாணவிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், பள்ளிகள் திறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரி, காரைக்காலில் இலவச மாணவர் சிறப்பு பஸ் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கொடி அசைத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்