பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்குஇலவச பஸ் பயண அட்டையை புதுப்பிக்க முகாம்கடலூரில் 24, 25-ந்தேதிகளில் நடக்கிறது
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டையை புதுப்பிக்க முகாம் கடலூரில் 24, 25-ந்தேதிகளில் நடக்கிறது.
கடலூர், மார்ச்.18-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பஸ்களில் கட்டணம் ஏதுமின்றி மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கு இலவச பஸ் பயண அட்டை ஒவ்வொரு நிதியாண்டும் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2023-2024-ம் நிதியாண்டிற்கு இலவச பஸ் பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 25-ந்தேதி (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டை பெற்றுள்ளவர்கள், இந்த 2 நாட்களில் நடைபெற உள்ள இலவச பஸ் பயண அட்டை புதுப்பித்தல் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், மார்பளவு புகைப்படம்-4 மற்றும் இலவச பஸ் பயண அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவைகளுடன் கலந்து கொண்டு இலவச பஸ் பயண அட்டையை புதுப்பித்து பயன் அடைய வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.