இலவச ரத்தப் பரிசோதனை முகாம்
திருப்பத்தூரில் இலவச ரத்தப் பரிசோதனை முகாம் நடந்தது.
திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள டிஸ்கவரி லேபரட்டரியில் பொங்கலை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவச ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த கொழுப்பு பரிசோதனை மேலும் பல்வேறு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது. பொதுமக்கள் 150 கலந்துகொண்டு இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் டாக்டர் லட்சுமிபதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிறுவனர் டாக்டர் ராமலிங்கம், இயக்குனர் டாக்டர் பிரபு ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மக்கள் தொடர்பு அலுவலர் மோனீஸ்வர் நன்றி கூறினார்.