590 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

வாணியம்பாடியில் 590 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

Update: 2023-07-29 11:14 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுனில் உள்ள நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 590 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி, வாணியம்பாடி நகரமன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர் வி.எஸ்.சாரதிகுமார் வரவேற்றார்.

பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு வாணியம்பாடி நகராட்சி பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 590 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன், ஆலங்காயம் ஒன்றியக்குழுத் தலைவர் சங்கிதாபாரி மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்