அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
திருமருகல் அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
திட்டச்சேரி:
திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வி சுரேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருமருகல் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் பள்ளி மேலாண்மைக்குழு துணை தலைவர் மதியழகன், உறுப்பினர்கள் சங்கர், அருளாளன் மற்றும் பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.