மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை மாங்குடி எம்.எல்.ஏ. வழங்கினார்
தேவகோட்டை
தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் நிர்மலா தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ஸ்டீபன் வரவேற்றார். காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார்.ஆசிரியர் சிவப்பிரகாசம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதில் தேவகோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நாகனி ரவி, காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுசெயலாளர் பாப்பாங்கோட்டை பூமிநாதன், மாவட்ட துணைத்தலைவர் அப்பாச்சி சபாபதி, வக்கீல் சஞ்சய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் ஆசிரியர்கள், கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தேவகோட்டை தே.பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை மாங்குடி எம்.எல்.ஏ. வழங்கினார்.