மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

ஏரல் அருகே சிவகளை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

Update: 2023-07-24 18:45 GMT

ஏரல்:

ஏரல் அருகே உள்ள சிவகளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதீபா மதிவாணன் தலைமை தாங்கி 45 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி பேசினார். சிவகளை பஞ்சாயத்து உறுப்பினர் பிச்சையா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சுதா பொன்ராணி வரவேற்றார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் பட்டு, ஆசிரியர்கள் செண்பகவல்லி, சந்தான கிருஷ்ணன், விக்னேஷ், யோனா செல்வின், முத்துசெல்வி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்