ஓட்டப்பிடாரத்தில்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
ஓட்டப்பிடாரத்தில்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை சண்முகையா எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தாசில்தார் நிஷாந்தினி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை மேரி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜூலியட், வருவாய் ஆய்வாளர் கற்பகவள்ளி மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.