பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

Update: 2023-08-05 19:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் ஒன்றியம் அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் அருணகிரி சாமி வரவேற்றார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர் கணேச புஷ்பா, அரியநாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவேல், துணை தலைவர் காசிசிவகுருநாதன், அரியநாயகிபுரம் கிளை செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் நடராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலமுருகன், சின்னதுரை, கிளை கழகச் செயலாளர் மதியழகன், முத்துசாமி, பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்