பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

பத்தமடை பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

Update: 2023-07-25 19:26 GMT

சேரன்மாதேவி:

பத்தமடை ராமசேஷைய்யர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பத்தமடை பேரூராட்சி தலைவர் ஆபிதா ஜமால்தீன், பள்ளி செயலர் சுந்தர சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் லட்சுமண பாரதி, முதுகலை ஆசிரியர் ஸ்ரீராம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காந்தி, நகர இளைஞர் அணி ஜமால்தீன், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 80 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்