பங்குதாரர்களுக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்தவர் கைது

பங்குதாரர்களுக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-15 21:20 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை ராச்சாண்டார்திருமலையை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 47). இவர் திருச்சி வரகனேரியை சேர்ந்த ஆண்டோ இன்பன்ட் பெஸ்டின்(35) என்பவரிடம் குளிர்பான நிறுவனம் தொடங்கி நடத்தலாம் என்று கூறி உள்ளார். இதை நம்பி ஆண்டோ இன்பன்ட் பெஸ்டின் மற்றும் அவரது நண்பர்களான சகாயராஜ், ஞானசவுந்தரி ஆகியோர் தலா ரூ.8 லட்சம் வீதம் ரூ.24 லட்சத்தை குளிர்பான நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அந்த நிறுவனத்துக்கு மூலப்பொருட்கள் வாங்க ஆண்டோ இன்பன்ட் பெஸ்டின் மேலும் ரூ.10 லட்சத்தை வழங்கினார். பின்னர் பங்குதாரர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ராஜாராம் தனது பெயருக்கு பதிலாக தனது மனைவி சின்னபொண்ணுவை பங்குதாரராக நியமித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நிறுவனத்தில் இருந்து விலகியவர்களுக்கு ராஜாராம் கொடுக்க வேண்டிய பணத்தில் ரூ.24 லட்சத்துக்கு கடன் பத்திரமும், ரூ.10 லட்சத்துக்கு காசோலையும் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு இதுவரை பணம் கிடைக்காததால் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஆண்டோ இன்பன்ட் பெஸ்டின் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தி ராஜாராம், அவரது மனைவி சின்னபொண்ணு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த ராஜாராமை நேற்று முன்தினம் ேபாலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்