பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி; பெண் உள்பட 3 பேர் கைது
பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பலரிடம் பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர். இதில் அறந்தாங்கி சேகர் அளித்த புகாரில் கே.புதுப்பட்டியை சேர்ந்த சந்தோஷ் ராஜ் (வயது 28), மதுரை ராஜ்கமல் (40), கன்னியாகுமரியை சேர்ந்த நிவேதா(26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பிரான்சில் உள்ள நிவேதாவின் கணவர் அட்லினை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.