பழைய கார் விற்பனை செய்வதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் ரூ.80 ஆயிரம் நூதன மோசடி

பழைய கார் விற்பனை செய்வதாக கூறி ராமநாதபுரம் அருகே ஆட்டோ டிரைவரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-09-30 18:45 GMT

பழைய கார் விற்பனை செய்வதாக கூறி ராமநாதபுரம் அருகே ஆட்டோ டிரைவரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்

ராமநாதபுரம் அருகே உள்ள பொட்டகவயல் வடக்குத்தெருவை சேர்ந்தவர் முகம்மது தவ்பீக்அலி (வயது 27).ஆட்டோ டிரைவர். இந்த நிலையில் அவர் ஆன்லைனில் பழைய பொருட்கள் விற்பனை தளத்திற்கு சென்று பழைய கார் குறித்து தேடி உள்ளார்.

அதில் 2013-ம் ஆண்டு வாங்கப்பட்ட பிரபல நிறுவன கார் ஒன்றின் விலை ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் உள்ள செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது தனது பெயர் ஸ்ரீஹன்ஸ்குமார் என்றும் ஐதராபாத்தில் உள்ள ராணுவ முகாமில் வேலை செய்து வருவதாகவும், சில மாதங்களுக்கு முன்பு தான் திருவண்ணாமலையிலிருந்து பணியிட மாறுதலில் வந்ததாகவும் கூறி ரூ.2½ லட்சத்துக்கு காரை விற்க சம்மதித்து உள்ளார்.

காரின் ஆவணங்கள்

இதையடுத்து அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் காரின் படங்களை அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்த முகம்மது தவ்பீக்அலி அந்த ஆவணங்களை பரிசோதித்து பார்த்தபோது உண்மையானது என்று தெரியவந்தது. இதனால் அந்த காரை வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக முதலில் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி உள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட நபர் காரை கூரியர் மூலம் உங்களின் முகவரிக்கே அனுப்பி வைப்பதாக கூறி அதற்காக ரூ.4 ஆயிரம் தொகையையும் பெற்றுக்கொண்டாராம். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர் கார் பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறி வரி உள்ளிட்ட காரணங்களை தெரிவித்து 7 தவணைகளில் மொத்தம் ரூ.79 ஆயிரத்து 200 பெற்றுள்ளார். பின்னர் ெதாடர்ந்து பணம் கேட்டதால் தன்னை ஏமாற்றியதை உணர்ந்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்