வேலைவாங்கி தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.8½ லட்சம் மோசடி
பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிரபல தனியார் நிறுவனம்
கோவை வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). இவரு டைய மனைவி அனிதா (40). பட்டதாரியான சுரேஷ் வெளி நாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். அவர் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைனில் அறிவிக்கப்பட்டது. அதை நம்பி அந்த எண்ணுக்கு அனிதா தொடர்பு கொண்டார்.
எதிர்முனையில் பேசிய நபர், குறிப்பிட்ட பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரை கூறி அங்கு எங்களுக்கு தெரிந்த பலர் உயர் பதவியில் உள்ளனர். எனவே எளிதாக வேலை கிடைத்து விடும்.
மாதந்தோறும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் கிடைக் கும். எனவே அந்த வேலையை வாங்கிக் கொடுக்க பணம் தர வேண்டும் என்று கேட்டு உள்ளனர்.
ரூ.8½ லட்சம் மோசடி
இது பற்றி அனிதா தனது கணவரிடம் கூறி உள்ளார். அதன் பிறகு அவர்கள் 2 பேரும் சேர்ந்து, சுரேசின் படிப்பு உள்ளிட்ட விவரங்களை அவர்கள் கூறிய இ-மெயில் முகவரிக்கு அனுப்பினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு கடந்த மே மாதம் முதல் தற்போது வரை பல்வேறு தவணையாக ரூ.8 லட்சத்து 56 ஆயிரத்து 115-ஐ அனுப்பி உள்ளனர். அதன்பிறகும் அவர்கள் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
இதனால் அனிதா மற்றும் சுரேஷ் ஆகியோர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் என்று வந்தது. இது குறித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.