தொழில் அதிபர்களிடம் ரூ.4¾ லட்சம் மோசடி

கோவையில் தொழில் அதிபர்களிடம் ரூ.4¾ லட்சம் நூதன மோசடி நடைபெற்றுள்ளது.

Update: 2022-06-30 14:49 GMT


கோவையில் தொழில் அதிபர்களிடம் ரூ.4¾ லட்சம் நூதன மோசடி நடைபெற்றுள்ளது.

தேங்காய் வாங்குவதாக மோசடி

கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 60). தேங்காய் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து இவரிடம் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தான் உணவு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், கொப்பரை தேங்காய் வேண்டும் கூறியுள்ளார்.

இதையடுத்து ஆர்டரின் பேரில், 2 டன் எடையிலான ரூ.2.42 லட்சம் மதிப்பிலான கொப்பரை வாங்கியுள்ளார். ஆனால் அந்த நபர் பணத்தை பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து உதயகுமார் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளியலறை பிட்டிங்

இதேபோல ஆர்.எஸ்.புரம் பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் (63). குளியலறை பிட்டிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார். அப்போது அவர் பெட்ரோலியம் நிறுவனத்தில் பாத்ரூம் பிட்டிங் செய்து தரவேண்டும். இதற்கு நீங்கள் ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் முன்பணம் கட்ட வேண்டும். வேலை முடிந்ததும் பில் மற்றும் டெபாசிட் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய சதீஷ் ஆன்லைன் மூலம் அந்த மர்ம பர் கொடுத்த வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்தை செலுத்தினார். பணத்தை பெற்ற அந்த நபர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்