கார் டிரைவரிடம் ரூ.2½ லட்சம் மோசடி
கார் டிரைவரிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
கோவையை சேர்ந்த கார் டிரைவர் அருள்அன்பரசு (வயது 39) என்பவரிடம் நகையை ஏலம் எடுத்து தருவதாக கூறி காரைக்குடி கழனி வாசலை சேர்ந்த சங்கர் என்பவர் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கார் டிரைவர் அருள் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் சங்கர் மீது சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.