தாய்லாந்துக்கு அனுப்புவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி

தாய்லாந்துக்கு அனுப்புவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-10-08 21:03 GMT

மதுரை விக்ரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தெய்வம். இவருடைய மனைவி சுதா (வயது 41). இவர் கே.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகாரில், எனது மகனுக்கு வேலை தேடிக்கொண்டு இருந்தோம். அப்போது மதுரையை சேர்ந்த சுற்றுலா ஏஜென்சி நிறுவனம் நடத்தி வரும் பாரதிராஜா, மாரிமுத்து மற்றும் செந்தில்பாண்டி ஆகிய 3 பேரும் எங்களை தொடர்பு கொண்டு, தாய்லாந்தில் வேலை வாங்கித்தருவதாக கூறினார்கள். ஆனால், அதனை நம்பி நான் அவர்களிடம் ரூ.2 லட்சம் கொடுத்தேன். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள் எனது மகனை தாய்லாந்துக்கு அனுப்பாமல் மியான்மர் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சரிவர வேலை தரப்படவில்லை. இதனால் அவர் அங்கு சிரமப்பட்டு வருகிறார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக புதூர் போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்