ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி

ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி

Update: 2022-09-20 18:45 GMT

கோவை

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ருது ஸ்ரீ (24). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். ஆன்லைன் மூலமாக பல்வேறு தொழில் முதலீடு தொடர்பாக இவர் விசாரித்து வந்தார். அப்போது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தொழில் முதலீடு தொடர்பான ஒரு அறிவிப்பு வந்தது. இதில் பணத்தை முதலீடு செய்ய ருது ஸ்ரீ விருப்பம் தெரிவித்தார்.‌

அப்போது அந்த நிறுவனத்தினர் ஒரு லிங்க் அனுப்பி அதில் உள்ள விவரங்கள் அடிப்படையில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு கூறினார்.‌ இதன்படி ருது ஸ்ரீ 12 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் அந்த நிறுவனத்தினர் கூறிய வங்கி கணக்கில் டெபாசிட் செய்தார். சில நாட்களில் அது மோசடியான போலி வெப்சைட் மூலம் தகவல் அனுப்பி பணம் பறிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது. இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்