அரூரில் போலி நகையை கொடுத்து மோசடி: 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

Update: 2023-06-23 18:45 GMT

அரூர்

அரூரை சேர்ந்தவர் ஸ்வரூப் (வயது 32). இவர் அரூர்- சேலம் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகை கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் மற்றும் பெண் நகை வாங்க வந்துள்ளனர். அப்போது அவர்கள் 44 கிராம் எடை கொண்ட பழைய நகையை கொடுத்துவிட்டு 32 கிராம் எடை கொண்ட புதிய தங்க நகையை வாங்கி சென்றனர். அதன் பின்பு அந்த பழைய நகையை கடையில் சோதித்து உள்ளனர். அப்போது அவை போலி நகைகள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகையை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்