அதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி - மின்வாரிய அலுவலர் மீது வழக்கு

அதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்த மின்வாரிய அலுவலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

Update: 2023-03-16 20:22 GMT


மதுரை புதூர் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் என்ஜினீயராக இருப்பவர் பழனிசாமி. இவர் அண்ணாநகர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில் தனது அலுவலகத்தில் கணக்கு பிரிவில் வேலை பார்த்து வருபவர் என்.ஜி.குப்பராம். இவர் அதிகாரி கையெழுத்தை போலியாக போட்டு ரசீதுகளை வழங்கி மோசடி செய்துள்ளார். எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் என்.ஜி.குப்பராம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்