பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக-பெண்ணிடம் ரூ.3 லட்சத்து 64 ஆயிரம் மோசடி
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3 லட்சத்து 64 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தேரோடும் வீதி பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 31). இவர் இணையதளத்தில் வெளியான பணத்தை இரட்டிப்பாக்கும் தகவலை பார்த்தார். இதைத்தொடர்ந்து அவர் குறிப்பிட்ட அந்த முகவரிக்கு பல தவணைகளில் ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 200-ஐ செலுத்தியுள்ளார். அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நந்தினி இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.