வாலிபரிடம் ரூ.40 லட்சம் மோசடி

வாலிபரிடம் ரூ.40 லட்சத்து 96 ஆயிரத்தை மோசடி செய்ததாக 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-01-06 18:45 GMT

சிவகங்கை

ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் எனக்கூறிவாலிபரிடம் ரூ.40 லட்சத்து 96 ஆயிரத்தை மோசடி செய்ததாக 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.வாலிபரிடம் ரூ.40 லட்சத்து 96 ஆயிரத்தை மோசடி செய்ததாக 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஷேர்மார்க்கெட்

சிவகங்கை போஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகார்த்திக் (வயது 32). இவரிடம் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த விக்னேஸ்வரன்(28), தமிழ்ச்செல்வன்(48) ஆகியோர் ஷேர் மார்க்கெட் தொழில் செய்வதாக கூறினார்களாம். மேலும், தங்களிடம் ரூ.ஒரு லட்சம் முதலீடு செய்தால் மூன்று மாதத்தில் ரூ.3 லட்சம் தருவதாக கூறினார்களாம்.

இதை நம்பிய சிவகார்த்திக் ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் தனக்கு தெரிந்தவரிடம் வசூல் செய்து ரூ.53 லட்சத்து 9 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்று அவர்கள் திரும்ப சிவகார்த்திக்கு ரூ.12 லட்சத்து 12 ஆயிரத்து 750 மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. மீதித்தொகையான ரூ.40 லட்சத்து 96 ஆயிரத்தை கொடுக்கவில்லையாம்.

வாலிபரிடம் ரூ.40 லட்சம் மோசடி

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவகார்த்திக் இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி விக்னேஸ்வரன், தமிழ்ச்செல்வன், கணேஷ் பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்