ரூ.30½ லட்சம் மோசடி; 6 பேர் மீது வழக்கு

ரூ.30½ லட்சம் மோசடி; 6 பேர் மீது வழக்கு செய்யப்பட்டது

Update: 2023-01-06 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை அடுத்த சோழபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 51). இவரிடம் கலைக்குளம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவர் நட்பாக பழகி வந்தார். அப்போது அவர் சென்னை தலைமை செயலகத்தில் தன்னுடைய நண்பர் பணிபுரிந்து வருவதாகவும், அவரை அணுகினால் வேலை வாய்ப்பு பெற்று தருவார் என்றும் கூறினார். அத்துடன் கீழக்கண்டனியை சேர்ந்த ராம்குமார் என்பவரை அறிமுகப்படுத்தி இவர் தலைமை செயலகத்தில் பணிபுரிவதாக கூறியுள்ளார். இதை நம்பிய பரமசிவம் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய மகளுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தர சொல்லி ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்தாராம். பின்னர் அவர் மேலும் 10 பேரிடம் கூறி வேலை பெறுவதற்காக ரூ.30 லட்சத்து 57 ஆயிரத்து 500 வரை அனுப்பினாராம். பணத்தை பெற்று கொண்ட அவர் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை எனவும், வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரணை நடத்தி ராம்குமார், சிவா, மேனகா, முருகேசன், யோகராஜ், வனிதா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்