4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

தஞ்சை அருகே 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-29 19:46 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் கீழ்பாதி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் விக்னேஸ்வரன் (வயது 26). தஞ்சை மாதாக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராஜேஷ் (23), மாதாக்கோட்டை கல்லறை தோட்டம் அருகே ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் சஞ்சய் (20), தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் பூண்டி தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் சின்னதுரை (26). இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் விக்னேஸ்வரன், ராஜேஷ், சஞ்சய், சின்னதுரை ஆகிய 4 பேரையும், வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்