பொதுமக்களுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சி

பொதுமக்களுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-08-04 20:34 GMT

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என 10 பேருக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சி தொடங்கப்பட்டது. இந்த பகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஓட்டுனர் உரிமமும் பெற்று தருகிறோம். அதனை நீங்கள் நன்கு கற்று, உங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்