நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி-பாலக்காடு இடையே நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-22 17:24 GMT

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி-பாலக்காடு இடையே நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பணிகள் மும்முரம்

பொள்ளாச்சி-பாலக்காடு சாலை வழியாக தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. கேரளாவிற்கு லாரி, கனரக வாகனங்கள் அதிகமாக சென்று வருவதால் பாலக்காடு ரோட்டில் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படும். இந்த நிலையில் வாகன பெருக்கத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. இதன் காரணமாக இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது.

இதற்காக ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜமீன்முத்தூர் வழியாக செல்லும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள பாலத்தை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.70 கோடி செலவில்...

பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு இருவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலையை பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வரை 11.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்த பணிகள் ரூ.70 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. மேலும் மின் கம்பங்கள், மின் மாற்றிகள் மாற்றி அமைக்கப்படுகிறது. தற்போது வரை 60 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது. வருகிற ஜனவரி மாதம் வரை ஒப்பந்த காலம் உள்ளது. இருப்பினும் அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்