தா.பழூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா
தா.பழூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் 6-வது வார்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) விஸ்வநாதன், ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி வீரமணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், துணைத்தலைவர் மாலதி ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.