திருச்செந்தூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ரூ.3¾ கோடியில் புதிய தொழில்நுட்ப மையத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா

திருச்செந்தூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ரூ.3¾ கோடியில் புதிய தொழில்நுட்ப மையத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-07-30 15:12 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் ரூ.3.73 கோடி மதிப்பில் புதிதாக தொழில்நுட்ப மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று அரசு தொழில் பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மீன்வளம், மீனவர் நல ன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட உள்ள தொழில்நுட்ப மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில், தூத்துக்குடி கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவி, உதவி செய்ய பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் செல்வகுமார், திருச்செந்தூர் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் அருள், பயிற்சி அலுவலர் சிவகுருநாதன், திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதீஸ் வி.ராயன், மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜன், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்