அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

காசிதர்மம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.40 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2023-04-04 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காசிதர்மம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி மாநில துணைச் செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்