சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

Update: 2023-02-03 18:45 GMT

வேதாரண்யத்்தை அடுத்த அகஸ்தியம்பள்ளியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் விரிவாக்க கட்டிடம் கட்டும் பணிக்கு தமிழக அரசால் ரூ.1 கோடியே 22 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நகர் மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, என்ஜினீயர் முகமது இப்ராஹீம், துணைத்தலைவர் மங்களநாயகி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், சுகாதார மருத்துவ ஊழியர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்