அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
பாவூர்சத்திரம் அருகே அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகேயுள்ள வினைதீர்த்தநாடார்பட்டி அரசு தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி ஆராதனாவின் கோரிக்கையை ஏற்று, அப்பள்ளியில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடம் கட்டிட ரூ.35½ லட்சம் ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
அந்த வகுப்பறை கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ேநற்று நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், பஞ்சாயத்து தலைவர் ஐவராஜா, கவுன்சிலர் மேரிமாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஆகாஷ், மாணவி ஆராதனாவுடன் இணைந்து அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் கண்ணன், முருகன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.