மீன்வள பல்கலைக்கழகத்தின் நிறுவன தின விழா

மீன்வள பல்கலைக்கழகத்தின் நிறுவன தின விழா நடந்தது.

Update: 2023-06-23 18:45 GMT


நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிறுவன தின விழா நடைபெற்றது. இதையொட்டி நீலப்புரட்சி என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை போட்டி, ஓவியம் வரைதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்திய பிரசாரம் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட முட்டம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மீன்வளக் கல்வி மற்றும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) மணிமேகலை தலைமையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் காரைக்கால் ராஜீவ்காந்தி மீன் வளர்ப்பு மையத்தின் மூத்த அறிவியல் அதிகாரி தினகரன் கலந்துக்கொண்டு லாபமான மீன்வளர்ப்பு குறித்து பேசினார். இணையவழியாக பள்ளி மாணவ- மாணகளுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்