பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நேற்று மாலையில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் அழகு பாண்டியன், பொருளாளர் பொன் இருளாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.