தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

Update: 2023-05-20 10:56 GMT

ஊத்துக்குளி

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் காவுத்தம்பாளையம் வாய்த்தோட்டம் பகுதியில் தமிழக விவசாயிகள் சங்கம் நடத்தும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தினால் விருதுநகர் முதல் கவுத்தம்பாளையம் வரை அமைய உள்ள765/400 கிலோ வாட் உயர் மின்கோபுரம் துணை மின் நிலையத்தினால் ஏற்படும் ஆபத்திலிருந்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்றுவதற்காக ஊத்துக்குளி ஒன்றிய தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்