பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்-விவசாயிகள் கவலை
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, பள்ளிபட்டி, இருளப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளத்தை சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் பருவமழை பெய்ததால் மக்காசோள பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து வந்தது. தற்போது விளைந்த மக்காச்சோளங்கள் மற்றும் கதிர்களில் படைபுழுக்கள் அதிகமாக துளையிட்டு பயிர்களை தாக்கி அழிக்கிறது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு தடுப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.