முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கு: தம்பிக்கு ஜாமீன் மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

Update: 2023-02-28 20:11 GMT

சென்னை,

தி.மு.க. முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்22-ந்தேதி கூடுவாஞ்சேரி அருகே காரில் சென்றபோது மர்மமான முறையில் இறந்தார். அதுதொடர்பாக அவரது மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மஸ்தானின் நெருங்கிய உறவினரும், கார் டிரைவருமான இம்ரான் பாஷா உள்பட பலர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் மஸ்தானின் தம்பி கவுஸ் ஆதம்பாஷாவுக்கும் தொடர்பு உள்ளது வெளிச்சத்துக்கு வந்தது. பூர்வீக சொத்து மற்றும் கடன் பிரச்சினையில் டாக்டர் மஸ்தான் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் கவுஸ் ஆதம்பாஷா மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுஸ் ஆதம்பாஷாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும், வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்