ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை

கோவில்பட்டியில் நினைவு நாளை ஒட்டி ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2022-12-05 18:45 GMT

கோவில்பட்டி:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி கோவில்பட்டியிலுள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்தார்.

கடம்பூர் ராஜூ மரியாதை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளை யொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், கருப்பசாமி, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். பின்னர் இனாம் மணியாச்சி சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா உருவப் படத்திற்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து ெகாண்டனர்.

கயத்தாறு

கயத்தாறு புதிய பஸ் நிலையம் அருகில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்-கழுகுமலை

திருச்செந்தூர் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் தேரடி திடலில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழுகுமலையில் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் முத்துராஜ் தலைமையில் நகர இளைஞரணி செயலாளர் கழுகுமலை கருப்பசாமி முன்னிலையில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் அருகிலும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஆழ்வார்திருநகரி- குலசேகரன்பட்டினம்

நாசரேத் நகர அ.தி.மு.க சார்பில் காமராஜர் பஸ் நிலையம் மற்றும் கே. வி. கே. சாமி சிலை அருகே ஜெயலலிதாவின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. ஆழ்வார்திருநகரி பெருந்தலைவர் காமராஜ் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார் தலைமையில் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம் பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு உடன்குடி ஒன்றிய பொருளாளர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். இதில்குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராமலிங்கம் என்ற துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்