முன்னாள் பேரூராட்சி தலைவர் கைது
முன்னாள் பேரூராட்சி தலைவரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் கோஸ் (வயது 56). இவர் கொடிக்குளம் பேரூராட்சி தலைவராக பதவி வகித்தவர் ஆவார். கூமாபட்டி ராமசாமிபுரம் அம்பேத்கர் சிலையிலிருந்து அரை நிர்வாணமாக சென்னை கலைஞர் நினைவிடத்தை நோக்கி நடைபயணம் மேற்கொள்வதாக அறிவித்து நடை பயணத்தை தொடங்க சென்றார். அப்போது அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் கருத்த பாண்டி அனுமதியின்றி நடைபயணம் மேற்கொண்டதாக கூறி கோசை கைது செய்தார். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.