தந்தைக்கு கோவில் எழுப்பிய முன்னாள் ஐ.ஜி.

புதுக்கோட்டையில் தந்தைக்கு முன்னாள் ஐ.ஜி.கோவில் எழுப்பி உள்ளார்.

Update: 2023-04-05 18:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த கடியாப்பட்டி அருகே உள்ள கானப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பெரியய்யா. இவர் கோவையில் சட்டம்-ஒழுங்கு ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது தந்தை நல்ல குருந்தப்பன் (வயது 90) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தீவிர சிவ பக்தரான இவர் ஓலைச்சுவடிகளை படித்து அருள்வாக்கு கூறிவந்துள்ளார். தந்தை மீது கொண்ட பாசத்தால் இவரது மகன்களான பெரியய்யா மற்றும் நியூயார்க்கில் வசித்து வரும் ராஜன் குருந்தப்பன் ஆகியோர் அவர்களது சொந்த ஊரான கானப்பேட்டை கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் சுவாமி குரு கோவில் சிவாலயம் என்ற பெயரில் கோவில் கட்டியுள்ளனர். கருவறையில் சிவனையும், கருவறைக்கு வெளியே இவர்களது தந்தையான நல்ல குருந்தப்பன் சிலையையும் நிறுவி உள்ளனர். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்