கூடலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலி

கூடலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.

Update: 2022-10-19 17:07 GMT

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியை சேர்ந்தவர் அசோகன் (வயது 55). விவசாயி. இவருக்கு, கூடலூர் அருகே தம்மணம்பட்டியில் தோட்டம் உள்ளது. இந்தநிலையில் அசோகன், தனது மனைவி முருகேஸ்வரியுடன் (47) தம்மணம்பட்டியில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சுருளிப்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கூடலூர்-குமுளி சாலையில் மந்தை வாய்க்கால் பாலம் பகுதியில் அவர்கள் வந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து அசோகனும், அவரது மனைவியும் தூக்கிவீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அசோகன் பலியானார். முருகேஸ்வரி படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது முருகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே அசோகனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்