திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கம் - துரைமுருகன் அறிவிப்பு
திமுகவில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய இரு அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை,
திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதன்படி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவராக கதிர் ஆனந்த் எம்.பியும், செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ டி.செங்குட்டுவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலர்களாக கௌதம சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், ஈஸ்வரப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.