சோதனைச்சாவடியில் ரூ.2¼ லட்சம் பறிமுதல்

ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-14 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனைச்சாவடிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மாநில எல்லை அருகே வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடிகள் உள்ளன. இங்கு ஓசூரில் இருந்து கர்நாடகா மற்றும் பிறமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும் சோதனைகள் செய்யப்படுகிறது.

இங்கு வாகனங்களுக்கு அனுமதி சீட்டும் வழங்கப்படுகிறது. இந்த சோதனைச்சாவடிகளில் அனுமதி சீட்டு வழங்க வாகன உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்குவதாக, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பணம் பறிமுதல்

இதனைத்தொடர்ந்து நேற்று மாலை 4 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனுமதி சீட்டு வழங்கும் சோதனைச்சாவடியில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுல்தான் மற்றும் போலீசார் சுமார் 3 மணி நேரம் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் இருந்தது. இதையடுத்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்