பட்டா நிலங்களுக்கு செல்லும் வழியை துண்டித்த வனத்துறையினர்

வாணியம்பாடி அருகே பட்டா நிலங்களுக்கு செல்லும் வழியை வனத்துறையினர் துண்டித்ததால் விவசாயிகள் பாதிப்பு.

Update: 2022-06-14 17:32 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த தும்பேரி கிராமம் பாரதி நகர் பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட பட்டா நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களுக்கு செல்லக்கூடிய வழியை வனத்துறை அதிகாரிகள் துண்டித்து உள்ளனர். இந்த நிலங்களுக்கு வேறு ஏதும் வழிகள் கிடையாது. இதுபோன்று 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்ல வழிகள் கிடையாது. தற்போது வனத்துறையினர் பாதையை அடைத்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்