குன்னூர் மலைப்பாதையில் காட்டுத்தீ -போக்குவரத்து பாதிப்பு

குன்னூர் மலைப்பாதையில் காட்டுத்தீ -போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-04-14 18:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் ஆங்காங்கே காட்டுத் தீ ஏற்படுகிறது. இந்த நிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குரும்பாடி அருகே சாலையோரத்தில் காட்டுத் தீ ஏற்பட்டு மள மள வென பரவியது. உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் காட்டுத் தீ யை சுமார் ஒரு மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் மலைப்பாதையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்